“ஓசை பிலிம்ஸ்” கலைவளரி சக ரமணதாஸ் மற்றும் சுகந்தினி அவர்களின் தயாரிப்பில் “அந்தோனி” திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு யாழ் மாவட்ட ரீதியிலான மட்டுப்படுத்தப்பட்ட 32 அணிகளுக்கிடையிலான “அந்தோனி கிண்ணம்” உதைபந்தாட்ட தொடர் நேற்று இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கினது அனுமதியுடன் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் இப்போட்டியில் நேற்றையதினம் பங்கு பற்றி விளையாடியிருந்த அணிகளில்

ஞானமுருகன் வி.க 04 – காளியம்பாள் வி.க 00

சென்.அன்ரனிஸ் (யாழ்) 01 – அண்ணா வி.க 00

றோயல் வி.க 02 – வீனஸ் வி.க 00

யங்ஹென்றீசியன் வி.க 04 – நவசக்தி வி.க 00

மேற்படி கோல் கணக்கில் வெற்றியீட்டிய அணிகளுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

தொடர்ச்சியாக இடம்பெறப் போகின்ற இக்கால்ப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகளை கண்டுகளிப்பதற்காக கால்பந்தாட்ட ரசிகர்கள் மற்றும் திரைத்துறை ஆர்வலர்கள் கலைஞர்கள் அனைவரையும் வருகை தருமாறு அன்போடு அழைத்து நிற்கின்றோம்.